IOB Bank: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. உள்ளூரிலேயே ஜாப் கிடைக்க சான்ஸ்.. 85 ஆயிரம் வரை சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.85 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உள்ளூரிலேயே பணியிடங்கள் கிடைக்க சான்ஸ் உள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கி என்பதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

IOB Bank job Indian Overseas Bank 250 posts Chance to Work Locally with a Salary of Up to 85 000

இதனால், அரசு வேலை கனவுடன் போட்டி தேர்வர்கள் விரும்பும் தேர்வு அறிவிப்புகளில் ஒன்றாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு பார்க்கப்படுகிறது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன? போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

லோக்கல் பேங்க் ஆபிசர் - 250 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது

தமிழ்நாடு - 100
கர்நாடகா - 50
மகாராஷ்டிரா - 50
குஜராத் - 50

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 01.08.2006 க்கு பிறகோ, 02.08.1996 க்கு முன்பாகவோ பிறந்தவராக இருத்தல் கூடாது. அரசுவிதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி பிரிவினராக இருந்தால் 35 வயது வரையும், ஒபிசி பிரிவினராக இருந்தால் 33 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளாக 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு:

தேர்வு செய்யப்படும் லோக்கல் பேங்க் ஆபிசர்களுக்கு மாதம் ரூ.48,480 - 85,920 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு - தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்:

சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை, திருச்சி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி / நாகர்கோவில், தஞ்சாவூர், கடலூர் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தேர்வு எழுத விரும்பும் மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 08.08.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.08.2026

தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.iob.bank.in/en/careers

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+