இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை.. 1.40 லட்சம் சம்பளம்.. செம சான்ஸ்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம் எஸ் சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் லாபகரமாக இயங்கக் கூடிய நிறுவனங்களில் ஒன்றாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 97 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Job Jobs Employment

பணியிடங்கள் விவரம்: 97 உதவி தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் (கிரேடு A0) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வேதியியல் அல்லது அதற்கு நிகரான பாடப்பிரிவுடன் எம்.எஸ்.சி பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களும் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் என்றால் 55 சதவிகித மதிப்பெண்கள் போதும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கோரப்பட்டுள்ளது. டெஸ்டிங் / குவாலிட்டி கண்ட்ரோல் / பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட துறைகளில் பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். எனினும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் என்றால் 35 வயது வரையிலும், ஓபிசி பிரிவினர் என்றால் 33 வயது வரையிலும் மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினர் என்றால் 40 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?: அஸ்சிஸ்டண்ட் குவாலிட்டி கண்ட்ரோல் ஆஃபிசர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை: கணிணி வழி தேர்வு, குரூப் டிஸ்கசன் / குரூப் டாஸ்க் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணத்தை பொறுத்தவரை ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f825dc56541e4bcc8a7c3d5fdcd7ac81.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+