ISRO job: இஸ்ரோவில் வேலை பார்க்க விருப்பமா? பத்தாம் வகுப்பு, ஐடிஐ போதும்! கை நிறைய சம்பளம்.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெக்னீசியன் துறையில் மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.19 ஆயிரம் வழங்கப்படும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய விண்வெளித்துறையின் கீழ் இஸ்ரோ செயல்படுகிறது.

ISRO job vaccancy

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்புத்துறைக்கு தேவையான செயற்கைகோள்களை ஏவுதல், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு இணையாக விண்வெளித்துறையில் இந்தியாவின் இஸ்ரோ சாதித்து வருகிறது.

இத்தகைய பெருமை மிக்க இஸ்ரோவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது பலரது லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில்தான், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

டெக்னிஷியன் துறையில் மொத்தம் 24 பணியிடஙக்ள் உள்ளன.

ஃபிட்டர் - 08
எலக்ட்ரிஷியன் - 04
ஆர்& ஏசி - 05
டர்னர் - 01
மெஷ்னிட்ஸ்ட் - 02
எம்விஎம் - 01
எலக்ட்ரோபிளேட்டர் - 01
இலகுரக வாகன டிரைவர் - A - 03
ஸ்டாப் கார் டிரைவர் - 02
கனரக வாகன ஓட்டுநர் - 10

கல்வித் தகுதி:

பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். டெக்னிஷியன் பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். டிரைவர் பணியிடங்களுக்கு உரிய வாகன ஒட்டுநர் உரிமம் அவசியம். குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம். கனரக வாகன டிரைவர்களுக்கு 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் சலுகை அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

மாதம் ரூ.19,900 முதல் வழங்கப்படும். இதர சலுகைகளும் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழி ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 திருப்பி அளிக்கப்படும். பிற பிரிவினருக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க வரும்: 13.11.2026 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+