இஸ்ரோவில் வேலை பார்க்க ஆசையா? டெக்னீஷியன் பணியிடங்கள்.. மாதம் 1.42 லட்சம் சம்பளம்.. விட்றாதீங்க
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் nrsc மையத்தில் காலியாக உள்ள 13 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.22 ஆயிரம் சம்பளம் முதல் 1.40 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு நிகராக வியத்தகு சாதனைகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. நாட்டையே பெருமைப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் இஸ்ரோவில் வேலை செய்ய வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் விருப்பமாக உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோவின் என்.ஆர்.எஸ்சி ((NRSC) நிறுவனத்தில் காலியாக உள்ள 13 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்)- 01
தொழில்நுட்ப உதவியாளர் (ஆட்டோமொபைல்)- 01
டெக்னீஷியன்-B (மின்னணு மெக்கானிக்)- 05
டெக்னீஷியன்-B (தகவல் தொழில்நுட்பம்)- 04
டெக்னீஷியன்-B (மின்சாரம்)-01
வரைவாளர்-B (சிவில்)-01
என மொத்தம் 13 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் துறை சார்ந்த பிரிவில், டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அதாவது, டெக்னிக்கல் அசிஸ்டண்ட் உதவியாளர் பணிக்கு வின்ணப்பிப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்து இருக்க வேண்டும்.
முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம். டெக்னீஷியன் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். தேர்வர்கள் கலவித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
வயது வரம்பு;
2025 நவம்பர் 30 ஆம் தேதியிட்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அன்றைய தேதியில், 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் பொது/ஓபிசி/EWS பிரிவினருக்கு ரூ.750 ஆகும். இதில் எழுத்துத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு ₹500 திரும்பச் செலுத்தப்படும். எஸ்சி/எஸ்டி/ பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ₹750 கட்டணம் விதிக்கப்படுகிறது. இவர்கள் தேர்வில் பங்கேற்றால் முழு கட்டணமும் திரும்பப் பெறப்படும். கட்டணம் ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
தேர்வு முறை:
தேர்வு செயல்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 1.5 மணி நேரம் நடைபெறும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.33 மதிப்பெண் குறைக்கப்படும்.
எழுத்துத் தேர்வில் தகுதி பெற, பொதுப் பிரிவினர் 80-க்கு 32 மதிப்பெண்களும், ஒதுக்கப்பட்ட பிரிவினர் (தளர்வு பெற்ற தரநிலை) 80-க்கு 24 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். திறன் தேர்வு அதிகபட்சம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் பொதுப் பிரிவினர் 50 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டு பிரிவினர் 40 மதிப்பெண்களும் பெற வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
டெக்னிக்கல் அசிஸ்டண்ட்: ரூ. 44,900 - ரூ. 1,42,400
டெக்னிஷீயன் பி: ரூ.21,700 - ரூ. 69,100
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://www.nrsc.gov.in/nrscnew/












Click it and Unblock the Notifications