IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சரில் இருந்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Accenture உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
என்னென்ன தகுதிகள்?
இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு எலக்ட்ரானிக்ஸ் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் (EMR) நன்கு தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் டெக்னிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். சாப்ட்வேர் டிரபிள் சூட்டிங் டெக்னிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவம் வேண்டுமா?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக 0-2 ஆண்டு வரை எலக்ட்ரானிக்ஸ் மெடிக்கல் ரெக்கார்ட்ஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதனால் அனுபவம் இல்லாதவர்களும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு மேற்கூறிய விஷயங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் என்ன?
இதுதவிர பணிக்கு அடிப்படையாக இருக்கும் ஆங்கிலத்திலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கபப்டவில்லை. பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
சென்னையில் பணி
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அக்சென்ச்சர் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications