IT Jobs: காக்னிசண்ட் ஐடி வேலைவாய்ப்பு.. ஆன்லைனில் இண்டர்வியூ.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வயூ ஆன்லைனில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் தற்போது IT Infrastructure Leader பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்து ஐடி இன்ஃப்ராஸ்ட்ரெக்ச்சர் ஆர்க்கிடெக்ச்சர், சொல்யூஷனிங் மற்றும் இம்பிளிமென்டேஷன் உள்ளிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 12 ஆண்டு முதல் 25 ஆண்டு அனுபவம் வேண்டும்.
கிளவுட் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரெக்ச்சர் ஆர்க்கடெக்ச்சர், எண்ட் டூ எண்ட் செக்யூரிட்டி பிளானிங்கில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். லார்ஜ் ஸ்கேல் இன்ப்ஃராஸ்ட்ரெக்ச்சர் டெலிவரிங் மற்றம் செக்யூரிட்டி இனிசியேட்டிவ்வில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர அனலிட்டிக்கல் ஸ்கில்,ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன், முடிவுகளை எடுக்கும் திறன் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ Virtual முறையில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோரின் விண்ணப்பங்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும். பணிக்கான தகுதிகள் இருப்பின் இண்டர்வியூவுக்காக தேதி, நேரம் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
