IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் கவலை வேண்டாம்.. HCL தரும் வேலை.. ஏப்ரல் 10ம் தேதி இண்டர்வியூ
சென்னை: சென்னையில் சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை அம்பத்தூரில் நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் இருப்பவர்களும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு அனுபவம் தேவையில்லை.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Banking Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

கல்வி தகுதி என்ன?
அதன்படி ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்களும், எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அரியர்ஸ் இருந்தாலும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை.
அதேவேளையில் 2025ல் படிப்பை முடித்தவர்களும், 2026ல் படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
என்னென்ன திறமைகள் வேண்டும்?
அதோடு விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound மற்றும் Outbound கால்ஸ்க்கு தயாராக இருக்க வேண்டும். பணியானது UK Shift முறையில் இருக்கும். ரோட்டேஷனல் முறையில் ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
என்னென்ன வசதிகள்?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த வசதியை பெற முடியும். பெண் ஊழியர்களுக்கு இது இலவசமாகும். இதுதவிர ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 10 ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8 Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ Face to ace முறையில் நடக்கும்.
நியமனம் எங்கே?
பணிக்கு தேர்வாகும் நபர்கள் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து ஏப்ரல் 10ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications