IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு HCL தரும் வேலை.. இன்று இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 2025ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்து பிப்ரவரி 17 ம் தேதி (இன்று) சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

சென்னை நாவலூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Customer Service Representative - Healthcare OTC Process-யில் International Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

it jobs job hcl

இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? ஒவ்வொருவருக்கும் என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் ஒரு டிகிரியை முடித்திருக்க வேண்டும். அதன்படி கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு படிப்பில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒருவேளை பட்ட மேற்படிப்பு என்றால் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

அனுபவம் தேவையில்லை

இது Freshersக்கான பணியாகும். இதனால் பணி அனுபவம் தேவையில்லை. 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அவர்கள் கடைசி செமஸ்டர் மதிப்பெண் சான்றுடன் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டும்.

அதேவேளையில் இன்ஜினியரிங், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு இண்டர்வியூவில் அனுமதியில்லை. பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும்.

ஷிப்ட் எப்படி?

அதுமட்டுமின்றி பணி என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி, பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இண்டர்வியூ

இதற்கான இண்டர்வியூ இன்று (பிப்ரவரி 17ம் தேதி) காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். தகுதியானவர்கள் முறையாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai,Near AGS Cinemas, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

நாவலூரில் பணி

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூர் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் Cab வசதி உள்ளது. அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் வரை Cab வசதி செய்து தரப்படும். இது பெண் ஊழியர்களுக்கு இலவசமாகும். மேலும் பணியாளர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மிஸ் செய்யாமல் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+