IT JOBS: அனுபவம் வேண்டாம்.. Bsc முடித்தோருக்கு HCL தரும் வேலை.. சென்னையில் இன்று முதல் 3 நாள் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இன்று (பிப்ரவரி 5), நாளை (பிப்ரவரி 6) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 7) என்று 3 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பிஎஸ்சி கணிதம் படிப்பை முடித்தவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்புகள் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் அசோசியேட் (Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பிஎஸ்சி கணிதம் படிப்பை முடித்தவர்களும், எம்எஸ்சி கணிதம் படிப்பை முடித்தவர்களும் தகுதியானவர்கள். இவர்களுக்கு பணி அனுபவம் தேவையில்லை.
கல்வி தகுதி என்ன?
அதேவேளையில் பிஇ, பிடெக், எம்டெக், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். மேலும் பிஎஸ்சி கணிதம் முடித்தவராக இருந்தாலும் கூட பணி என்பது கணக்கீடு அடிப்படையில் தான் இருக்கும்.
டிரெய்னிங்
இதனால் கால்குலேசன் மற்றும் லாஜிக்கல் அனலிசிஸில் ஆர்வம் இருக்க வேண்டும். இவர்களுக்கு நிறுவனம் சார்பிர் இன்டர்நேஷனல் எக்ஸ்போஷர் டிரெய்னிங் என்பதும் வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாத சம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
சென்னையில் நியமனம்
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.இவர்களுக்கு அலுவலகத்தில் இருந்து 30 முதல் 35 கிலோமீட்டர் தொலைவுக்கு Cab வசதி உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.
இண்டர்வியூ இடம்
இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று (பிப்ரவரி 5), நாளை (பிப்ரவரி 6) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 7) என 3 நாட்கள் சென்னையில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies, ETA 3, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai,near AGS Cinmeas, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications