IT Jobs: சென்னை சோழிங்கநல்லூரில் ஐடி வேலை.. அழைக்கும் HCL.. சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து 2024 முதல் 2026ம் ஆண்டுக்குள் டிகிரி முடித்தோருக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

hcl-hiring-for-freshers-healthcare-voice-process-roles-in-chennai

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து ஹெல்த்கேர் வாய்ஸ் புராசஸ் (மெடிக்கல் பில்லிங்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட .ள்ளனர். புராசஸ் அசோசியேட் என்ற ரோலில் தேர்வாகும் நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்த பணியை விரும்புவோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவர்கள் 2024 முதல் 2026ம் ஆண்டுக்குள் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

மாறாக பிஇ, பிடெக் படிப்பை முடித்தவர்கள், எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம். மாறாக விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி பணியின்போது கஸ்டமர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில் மற்றும் சாட் வழியாக பதிலளிக்க தெரிந்திருக்க வேண்டும். டே்டா மேனேஜ், மல்டிபிள் சிஸ்டம்ஸ் மற்றும் டேட்டாபேஸ் உள்ளிட்டவை பற்றி நன்று அறிந்து வைத்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி என்பது US Shift முறையில் தான் இருக்கும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். இண்டர்வியூக்கான தேதி, நேரம் உள்ளிட்டவை அறுிவிக்கப்படும். இண்டர்வியூ வழியாக தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+