IT JOBS: கோவையில் இண்டர்வியூ.. விண்ணப்பிக்க தயாரா? HCL தரும் சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் -லில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 6ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

நம் நாட்டில் இயங்கும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

it-jobs-hcl-hiring-for-java-backend-full-stack-developer-role-in-coimbatore

அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Java Backend/Full Stack Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு Java + Spring boot + Angular/ReactJs உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அதற்கு முன்பாக தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

விண்ணப்பம் செய்வோரின் விவரங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்பிறகு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். அதற்கு முன்பாக இண்டர்வியூ Call letter வழங்கப்படும்.

அதில் கோவையில் எந்த இடத்தில் இண்டர்வியூ நடக்கும், எத்தனை மணிக்கும் இண்டர்வியூ நடக்கும் என்பது உள்பட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. கோவையில் நடைபெற உள்ளது. Face To Face முறையில் இண்டர்வியூ இருக்கும். அதன்பிறகு பணி நியமனம் ஆணைகள் வழங்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+