IT JOBS: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல்லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
ஹைதராபாத்: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு (IT Jobs) குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (ஜனவரி 21) காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை ஹைதராபாத்தில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த ஐடி நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Technical Chat Support பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதுபற்றிய முழு விவரங்கள் வருமாறு:

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் கட்டாயமாக டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். வெப் பேஸ் டிசைனிங், எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் திறமை இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை விரைவாக முடிக்கும் திறமை இருக்க வேண்டும்.
அனுபவம் வேண்டுமா?
மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும். மேலும் பணி சூழலுக்கு ஏற்ப ஆங்கில மொழி உச்சரிப்பை மாற்றும் திறமை இருக்க வேண்டும். கிளைண்ட் பேசிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கஸ்டமர்கேர் அல்லது டெக்னிக்கல் ட்ரபிள்சூட்டிங் பிரிவில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
ஷிப்ட் எப்படி?
பணி US Shift முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட்டில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பிப்., 21ல் இண்டர்வியூ
பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் Cab வசதி உள்ளது. அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (பிப்ரவரி 21) காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech Office, Building H01B, Phoneix Avance Business Hub, Hitech City, Hyderabad என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம், அரசு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். லேப்டாப், பென்டிரைவ், எலக்ட்ரானிக் டிவைஸ் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications