IT Jobs:அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. மே 5 - 6 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மே 5 மற்றும் மே 6 என 2 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு அரியர்ஸ் இருப்பவர்களும், டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Voice and Non Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அரியர்ஸ் இருந்தாலும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
என்னென்ன திறமைகள் வேண்டும்?
இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound மற்றும் Outbound கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும். பணியானது UK, US, Austrialian Shift முறையில் இருக்கும். இதனால் நைட்ஷிப்ட் மற்றுமு் ரோட்டேஷனல் முறையில் ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். ஊழியர்களுக்கு அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். இதுதவிர ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 - 6 இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ மே 5 மற்றும் மே 6 என 2 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் சோழிங்கநல்லூரியிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications