IT JOBS: "அனுபவம் வேண்டாம்".. அரியர்ஸ் இருந்தாலும் சென்னை HCL-லில் வேலை.. மார்ச் 10ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும், அரியர்ஸ் வைத்திருப்போரும் விண்ணப்பம் செய்து மார்ச் 10ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Freshers Banking Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, பிற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருந்தால் மட்டுமே போதும். அதன்படி பிபிஏ, பிகாம், பிசிஏ, பிஎஸ்சி, எம்பிஏ, எம்ஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். ஒருவேளை அரியர்ஸ் இருந்தாலும் கூட அவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
என்னென்ன தகுதி வேண்டும்?
மேலும், விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்டர் கால் பேச தெரிந்திருக்க வேண்டும். பணி என்பது UK Shift அடிப்படையில் இருக்கும். இதனால் இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும்.
கார் வசதி உண்டு
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும்.
மார்ச் 10ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூர் மார்ச் 10ம் தேதி காலை 11 மணி முல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai, Tamil Nadu என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
சென்னையில் நியமனம்
இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெறும். லேப்டாப் எடுத்து செல்ல வேண்டும். ரெஸ்யூம் மற்றும் அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications