IT Jobs: அனுபவம் வேண்டாம் - டிகிரி மட்டுமே போதும்.. சென்னை HCL-யில் ஏப்.27 ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வரும் ஏப்ரல் 27 ம் தேதி (நாளை மறுநாள்) இண்டர்வியூ நடைபெற உள்ளது. 2024 முதல்2026ம் ஆண்டில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Semi Voice Process Freshers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it-jobs-hcl-hiring-freshers-semi-voice-process-on-april-25-in-chennai

இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?

இந்த இண்டர்வியூவில் பங்கேற்க கல்வி தகுதி ஏதாவது ஒரு டிகிரி மட்டும் தான். கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி படிப்பை 2024 முதல் 2026ம் ஆண்டு வரை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பட்ட மேற்படிப்பு என்றால் 2026ம் ஆண்டில் முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.

என்னென்ன திறமைகள் வேண்டும்?

இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை. ஆனாலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில், சாட் சப்போர்ட் வழங்க தெரிந்திருக்க வேண்டும். ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

ஏப்ரல் 27 ம் தேதி இண்டர்வியூ

இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 27 (நாளை மறுநாள்) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ Face to Face முறையில் நடக்கும். தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+