IT Jobs: அனுபவம் வேண்டாம்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. நாளை இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் வேண்டாம். கலை மற்றும் அறிவியல் பிரிவில் படிப்புகளை முடித்தவர்கள் நேரடியாக நாளை (மார்ச் 21)சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Customer service representative - Voice Process பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

இந்த பணிக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸில் ஏதாவது ஒரு பிரிவில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பட்ட மேற்படிப்பை முடத்தவர்கள் என்றால் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தகுதிகள் என்னென்ன?
அதேவேளையில், 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என்றால் கடைசி செமஸ்டருக்கான மார்க் ஷீட் நகலை கையில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம் பிஇ, பிடெக், எம்சிஏ படித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இண்டர்வியூ செல்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நைட் ஷிப்ட்டாக இருந்தாலும் ரெடியாக இருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ‛கிரேட் இன் இன்டஸ்ட்ரி' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
என்னென்ன வசதிகள்?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்கு Cab வசதி உள்ளது. பிக்அப் -டிராப் வசதி ஏற்படுத்தி தரப்படும். பெண் ஊழியர்களுக்கு இந்த சேவை இலவசமாகும். இந்த பணிக்கான இண்டர்வியூ மார்ச் 21ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இன்டர்வியூ எங்கே?
இண்டர்வியூ என்பது HCl Technologies, AMB 6, South Phase, Ambattur Industrial Estate 8, Madras Tiruvallur High Road, Ambattur, Chennai, Tamil Nadu 600 058 என்றமுகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளைய இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications