IT Jobs: டிகிரி முடிக்காவிட்டாலும் ஐடி வேலை.. சென்னை எச்சிஎல்-லில் மே 19ல் இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ மே 19ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இதில் டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் வைத்திருப்போர், ரிசல்ட்டுக்காக காத்திருப்போர் என அனைவரும் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது voice Process for Health Care Domain and Semi Voice Process for Finance and Accounting Domai பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கல்வி தகுதி என்ன?
* இந்த பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
* அரியர்ஸ் இருப்போரும் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போது தேர்வு எழுதி ரிசல்ட்டுக்கு காத்திருப்போரும் விண்ணப்பம் செய்யலாம்.
* அதேவேளையில் பிஇ, பிடெக், இன்ஜினியரிங் எம்எஸ்சி ஐடி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
என்னென்ன திறமைகள்?
இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound மற்றும் Outbound கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும். பணியானது UK, US, Austrialian Shift முறையில் இருக்கும். ரோட்டோஷனல் முறையில் ஷிப்ட் வரும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். ஊழியர்களுக்கு அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். இதுதவிர ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 19ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ மே 19 (நாளை மறுநாள்) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications