IT Jobs: டிகிரி மட்டுமே போதும்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து International Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

அதேவேளையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென் தகுதிகள் வேண்டும்?
மேலும் பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மேலும், மல்டி டாஸ்க் திறமை இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது ரோட்டேஷனல் முறையில் இருக்கும். இதனால் இரவு பணி செய்யவும் தயாராக வேண்டும்.
பணி என்ன?
பணிக்கு தேர்வாகும் நபர்கள் கஸ்டமர் சப்போர்ட் (புராசஸ் அசோசியேட்) என்ற பெயரில் நியமனம் செய்யப்படுவார்கள். இதனால் Inbound Calling இருக்கும். அதேவேளையில் சேல்ஸ் அல்லது அப்செல்லிங் அல்லது கிராஸ் செல்லிங் கிடையாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
ஏப்.,6ல் இண்டர்வியூ
இந்தபணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 6 ம் தேதி காலை 1.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Avenue, Elcot Sez, Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications