IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு சென்னை எச்சிஎல் தரும் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்து ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதன்படி ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்களும், எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை.
ஷிப்ட் எப்படி?
அதேவேளையில் 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் என்றால் கடைசி செமஸ்டர் மார்க்ஷீட்டை கையில் வைத்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். பணியானது US Shift முறையில் இருக்கும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
அதோடு விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
ஏப்ரல் 6ல் இண்டர்வியூ
இந்தபணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 6 ம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Tech, AMB 6, 8, South Phse, MTH Road, Ambattur Industrial Estate, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வாகன வசதி உண்டு
அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த வசதியை பெற முடியும். பெண் ஊழியர்களுக்கு இது இலவசமாகும். இதுதவிர ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications