அரியர்ஸ் இருந்தாலும் IT வேலை.. ஜனவரி 20ல் சென்னையிலேயே இண்டர்வியூ + பணி.. அழைக்கும் HCL
சென்னை: ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்களுக்கும், அரியர்ஸ் இருப்போருக்கும் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை எச்சிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜனவரி 20ம் தேதி காலை சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்களுக்கும் அதே நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Urgent Mega Walk in Interview என்ற பெயரில் Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூவில் யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Voice Process பணிக்கு முன்அனுபவம் எதுவும் தேவையில்லை. கல்லூரி படிப்பை சமீபத்தில் முடித்தவர்களும், இதற்கு முன்பு முடித்து அனுபவம் இல்லாதவர்களும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மொத்தத்தில் ஏதாவது ஒரு கல்லூரி படிப்பை படித்திருந்தால் போதும். அரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2025ல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சி படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அனுபவம் கொண்டவர்கள் என்றால் ஓராண்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் இண்டர்வியூவுக்கு வந்தால் அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
மேலும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இன்டர்பர்ஷனல் ஸ்கில் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும்.
எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பார்க்க தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு Cab வசதி உள்ளது. இன்டர்நேரஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 20ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூ No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur, Medavakkam High Road, Sholinganallur - 600 119, Chennai என்ற முகவரியில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நடைபெறும். தேர்வாகும் நபர்கள் அதே அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல அனுமதியில்லை.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications