IT Jobs: நாளை சென்னையில் இண்டர்வியூ.. HCL ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (மார்ச் 5) காலை 11 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Associate/Analyst -Procurement பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Procurement பிரிவில் 2 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் இருக்க வேண்டும்.
என்னென்ன பணி?
இல்லாவிட்டால் Pay Process அல்லது Production Planning பிரிவில் பணி அனுபவம் இருக்க வேண்டும். ஓபன் ஆர்டர் ஃபாலோ அப், ரிசெட்யூல், ரிட்டர்ன் ஆர்டர் மேனேஜ்மென்ட் (Subcontract POs, Scrap) தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டே பை டே ரெக்கார்ட் ரிப்போர்ட் தயாரிப்பு உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
ஷிப்ட் எப்படி?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி என்பது US Shift முறையில் இருக்கும். இனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். வாரம் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும்.
நாளை இண்டர்வியூ
இதற்கான இண்டர்வியூ நாளை (மார்ச் 5) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech Sholinganallur Elcot Sez/ Twer 4 Building - Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அப்போது கையில் 2 ரெஸ்யூம் வைத்திருக்க வேண்டும். லேப்டாப், டேப்லெட் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.
நியமனம் எங்கு?
தற்போதைய அறிவிப்பின்படி பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றி எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மிஸ் செய்யாமல் நாளை நடைபெற உள்ள இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications