IT JOBS: மெக்கானிக்கல் முடித்தோருக்கு ஐடி வேலை.. ஜன., 31ல் பெங்களூரில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஜனவரி 31ம் தேதி பெங்களூரில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கு பயன் பெறலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Mechanical Walk in for Design Engineer (NX CAD) என்ற பிரிவில் மெக்கானிக்கல் டிசைன் (லீட், டெக்னிககல் லீட்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஸ்கில்செட்டாக புராடக்ட் டிசைன் இன்ஜினியர், என்எக்ஸ் சிஏடி(NX CAD), மெடிக்கல் டிவைஸ் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தகுதி வேண்டும்
அதுமட்டுமின்றி NX CAD டிசைன் சாப்ட்வேர் மற்றும் டீம்சென்டர் பிஎம்எம் சாப்ட்வேரில் நிபுணத்துவத்துடன் இருக்க வேண்டும். GD & T ஸ்கில்ஸ், ஷீட் மெட்டல் மற்றம் பிளாஸ்டிக் பார்ட் டிசைன் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ASME Y 14.5 Standards-யில் நிபுணராக இருக்க வேண்டும்.
5- 10 ஆண்டு அனுபவம்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதன்படி புராடக்ட் டிசைன், டெவலப்மென்ட், மெக்கானிக்கல் அசம்பிள்ஸ், மோசன் கன்ட்ரோல் மற்றும் ஸ்ட்ரெக்ச்சர்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ரெஸ்யூம் அனுப்பலாம்
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை உள்ளவர்கள் தங்களின் ரெஸ்யூமை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் தற்போது பணியாற்றும் நிறுவனத்தின் பெயர், சம்பளம், எதிர்பார்க்கும் சம்பளம், நோட்டீஸ் பிரியட் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
ஜனவரி 31ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 31 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Special Economic Zone, Tower 4, GF Cafe 3, Jigani, 129, Bommasandra Jigani Link Road, Industrial Area, Bengaluru, Karnataka 560 105 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications