IT Jobs: அனுபவம் தேவையில்லை.. கோவை ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. ரெடியா?
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கோவை புளியகுளம் ரோட்டில் தாம் நகர் அமைந்துள்ளது. இங்கு Infolexus Solutions என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் எண்ட் டூ எண்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ், எச்ஆர் சர்வீசஸ், ஐடி சர்வீசஸ், மேன்பவர் சொல்யூஷன்ஸ், டிரெய்னிங் மற்றும் டெவலப்மென்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தInfolexus Solutions நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய அறிவிப்பின்படி டேட்டா அனலிஸ்ட் (Data Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டேட்டா அனலிஸ்ட் அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் 0- 1 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கல்லூரி படிப்பை முடித்தவர்களும் அனுபவம் இன்றி விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் அவர்களுக்கு எஸ்க்யூஎல் (SQL) நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ரிலேஷனல் டேட்டாபேஸஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டா விசுவலைசேஷன் டூல்ஸ்களான Tableau, Power BI, Looker உள்ளிட்டவை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Excel-ல் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பைத்தான் அல்லது Ris தெரிந்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்டாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிகிரி முடிக்காதவர்களுக்கும் வேலை.. அழைக்கும் HCL..ஏப்ரல் 14ல் சென்னையில் இண்டர்வியூ -
செவ்வாழை கிலோ ரூ.60.. பொள்ளாச்சியில் சர்ப்ரைஸ்.. கிடுகிடுவென ஏறிய விலை! கோவை விவசாயிகளுக்கு ஜாக்பாட் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications