IT Jobs: 10 பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள்.. மே 9ல் இண்டர்வியூ.. அழைக்கும் TCS
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 10 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மே 9 ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தற்போது ஐடி நிறுவனங்களில் பணியாற்ற இளம்வயதினர் அதிகமாக விரும்புகின்றனர். அந்த வகையில் பல்வேறு ஐடி நிறுவனங்களில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது 10 ஸ்கில்ஸ்செட்கள் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:
* Selenium Automation - Playwright /TOSCA
* Java - Spring boot/Microservices/core java
* ASP Dot Net/Core Dot net Full Stack
* Full Stack (Node JS + React JS)
* DevOPS
* Salesforce Service Cloud
* Databricks
* AWS Cloud
* AI/ML
* Gen AI உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த ஸ்கில்செட் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://ibegin.tcs.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு மே 9 ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services LTd., Peepul Park, Technopark Campus, Kariyavattom P.O, Trivandrum - 695581 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூ செல்லும்போது கையில் ரெஸ்யூம், டிசிஎஸ் அப்ளிகேஷன் ஃபார்ம், ஒரிஜினல் அரசு அடையாள அட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். இண்டர்வியூ செல்லும் இடத்துக்கு 30 நிமிடம் முன்கூட்டியே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications