IT JOBS: சென்னையிலேயே வேலை ரெடியா இருக்கு.. நவம்பர் 29ல் இண்டர்வியூ.. அழைக்கும் TCS
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வரும் நவம்பர் 29ம் தேதி சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Angular Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். இந்த ஐடி நிறுவனத்தில் நவம்பர் 29ம் தேதி பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Angular Developer பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி ஜாவா ஸ்கிரிப்ட் புரோகிராமிங் லேங்குவேஜில் நிபுணராக இருக்க வேண்டும். எச்டிஎம்எல் மற்றும் சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். UX கான்செப்ட்ஸ் பற்றிய புரிதல் வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்குலர் வெர்ஷன்ஸ், லைப்ரேரிஸ் மற்றும் ஃபிரேம்வொர்க்ஸ் உள்ளிட்டவற்றை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் ஃப்ரண்ட் எண்ட் டெவலப்மென்ட், கிராஸ் ஃபங்ஷனல் கோலாபோரேஷன் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆங்குலர் (Angular), டைப்ஸ்கிரிப்ட் (TypeScript), எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 5க்கும் அதிகமான ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு ரேத்வாகும் நபர்கள் வெப்அப்ளிகேஷன்ஸ் மற்றுமு் வெப்சைட்ஸ் டிசைன் மற்றும் டெவலப் செய்ய வேண்டி இருக்கும். உருவாக்கப்படும் வெப்சைட் யூசர் ஃப்ரண்ட்லியாக இருக்க வேண்டும். இதுதவிர இன்னும் சில முக்கிய பணிகளை செய்ய வேண்டி இருக்கும். அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு இண்டர்வியூவுக்கான இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications