IT Jobs: சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் அசத்திலான வேலை.. செப்டம்பர் 19ம் தேதி இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் டேட்டா சயின்டிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ செப்டம்பர் 19 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Data Scientist பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பத்தாரர்கள் இளநிலை பட்டப்படிப்பை கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் ஏதேனும் ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
ஸ்டேடிஸ்டிக்கல் அனலிசிஸ், மெஷின் லேர்னிங், டீப் லேர்னிங் உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும். பைத்தான் அல்லது R உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் தொடர்புடைய லைப்ரேரிஸ்களான Pandas, NumPy, scikit-learn, TensorFlow, PyTorch உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
டேட்டா சயின்ஸ், ஜெனரேட்டிவ் ஏஐ, கிளவுட் ஏஐ சர்வீசஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். கிளவுட் அடிப்படையில் ஏஐ சர்வீஸ்களான AWS, Azure, GCP உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இண்டர்வியூ Face to Face முறையில் நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TATA Consultancy Services, Magnum Block IT SEZ Phase-2, 200 Feet Radial Road, MC Nagar Extension, Thoraipakkam, Chennai - 600 097 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
