IT JOBS: நாளை ஆன்லைனில் இண்டர்வியூ.. டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னை உள்பட நாடு முழுவதும் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (நவம்பர் 28) ஆன்லைனில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Databricks பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளனர்.

அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு Azure Databricks, ADF, Delta, Lake, Unity Framework உள்ளிட்டவற்றை பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் PySpark, PySQL, Spark உள்ளிட்டவற்றில் கோடிங் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
IT Jobs: மதுரையில் ஐடி வேலை.. எச்சிஎல் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. நவம்பர் 29 ல் இண்டர்வியூ
SQL-லில் ஸ்ட்ராங்கான புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் CI/CI Pipeline, Git, DevOps Process உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் எந்த மாதிரியான பணி இருக்கும் என்பது பற்றி கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு நாளை ஆன்லைனில் இண்டர்வியூ நடைபெறும். ஒருவர் விண்ணப்பம் செய்யும்போது அவர்களின் விண்ணப்பங்கள் முதலில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும். அதன்பிறகு அவர்களுக்கு இண்டர்வியூவுக்கான லிங்க், நேரம் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும்.
இது ஒரு PAN India பணியாகும். இதனால் தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எந்த நகரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திலும் நியமனம் செய்யப்படலாம். வாய்ப்பு இருப்பின் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் கூட பணி கிடைக்கலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications