IT Jobs: மதுரையில் ஐடி வேலை.. எச்சிஎல் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. நவம்பர் 29 ல் இண்டர்வியூ
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நவம்பர் 29 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தமிழகத்தில் சென்னை, மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இருந்து அடிக்கடி வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மதுரையை எடுத்து கொண்டால் விமான நிலையம் - மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் இடையன்குளத்தில் எச்சிஎல் அலுவலகம் அமைந்துள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் (Automation Testing) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு Playwright + Selenium + REST Assured தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Appium + Selenium/playwright உள்ளிட்டவற்றில் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் ஆட்டோமேட்டட் டெஸ்ட்சூட்ஸ்க்கான எக்ஸிக்கியூஷன் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தியிட்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.இண்டர்வியூ என்பது நவம்பர் 29 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இதனால் விண்ணப்பம் செய்வோர் இண்டர்வியூவுக்கான லோகேஷனை முறையாக வழங்க வேண்டும். அதன்பிறகு நவம்பர் 29ல் இண்டர்வியூ நடக்கும் இடம், நேரம் பற்றிய விவரங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும்.
இண்டர்வியூ என்பது Face To Face முறையில் இருக்கும். ஆனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் தான் நியமனம் செய்யப்பட உள்ளனர். வேறு இடங்களில் பணி நியமனம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications