IT JOBS: Java Full Stack Developer வேலை.. டிசிஎஸ்-ஸில் ஜன.,31ல் இண்டர்வியூ.. பெங்களூரில் பணி
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 31ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
நம் நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமாக டாடா குழுமம் உள்ளது. இந்த டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனும் டிசிஎஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதி வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் கட்டாயமாக ஜாவா 11, ரியாக்ட் ஜேஎஸ், ஸ்பிரிங்புட் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டம். அதேபோல் சிஎஸ்எஸ், எச்டிஎம்எல்லில் நிபுணராக இருக்க வேண்டும். மேலும் ஜாவா ஸ்கிரிப்ட பி்டிங் டூல்ஸ் பயன்படுத்திய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் ஜாவா ஸ்கிரிப்ட் எம்வி-விஎம்/எம்விசி ஃப்ரேம்வொர்க்ஸ் மற்றும் ரியாக்ட் ஜேஎஸ் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் ஃப்ரண்ட் எண்ட் மற்றும் பேக் எண்ட் ஜாவா ஸ்கிரிப்ட் அப்ளிகேஷனில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் Postgres SQL, MongoDB உள்ளிட்டவற்றை பயன்படுத்தி டெவலப்பிங் டேட்டா அப்ளிகேஷன் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் கிளவுட் அடிப்படையிலான டெக்னாலஜியான GCP மற்றும் CICD பைப்லைன்ஸ், Gradle, Docker, Kubernetes உள்ளிட்டவற்றிலும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பராக 5+ ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்டும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 31ம் தேதி (சனிக்கிழமை) பெங்களூரில் நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் TCS Global Axis H Block, Gopalan Enterprises Pvt Ltd (Global Axis) SEZ, Opp. Satya Sai Hospital, Whitefield, Bengaluru 560 066 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications