IT JOBS: TCS ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையில் பணி நியமனம்.. நல்ல சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.

டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஜாவா ஸ்பிரிங்புட் (Java Spring boot) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it-jobs-tcs-hiring-for-java-spring-boot-role-in-chennai

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 11 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய பிரிவுகளில் பணி அனுபவம் வேண்டும். அதன்படி ஜாவா 17, ஸ்பிரிங்புட், எஸ்க்யூஎல் டேட்டாபேசஸ் - ரெடிஸ், மேங்கோ, கசண்ட்ரா, மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ச்சர்/எஸ்ஓஏ, மாவேன், JUnit, Mockito, IDE - Eclipse/STS/RAD, Git, RTC, Spring RestServices, Hibernate, Sprin JPA, XML/Json உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி Tomcat, IBM MQ Series/JMS, JNDI, JDBC, SOAP, Jenkins, Kubernetes, Kafka, Resilience 4 J,GraphQL உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+