IT JOBS: சென்னை - பெங்களூர் உள்பட 5 இடங்களில் ஐடி வேலை.. TCS தரும் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், கேரளா, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தொடர்ந்து பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது Java Springboot+GCP பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு சற்று விரிவாக பார்க்கலாம். அதன் விவரம் வருமாறு:
என்னென்ன தகுதிகள்?
விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 5+ ஆண்டுகள் ஜாவா (ஸ்பிரிங்புட்) பேக்எண்ட் டெவலப்மென்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்குலர்/ரியாக்ட் ஜே.எஸ் மற்றும் மாடர்ன் ஜாவா ஸ்கிரிப்ட்/டைப்ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
'டாக்கர்' தெரிந்திருக்க வேண்டும்
அதேபோல் Kafka (event Producers/consumers, topics, partitions, schmea rgistry) உள்ளிட்டவற்றில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். மேலும் கூகுள் கிளவுட் பிளாட்பார்ம் , அதன் சர்வீஸ்களான Pub/Sub, GKE உள்பட பிறவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். Docker, Kubernetes, CI/CD Pipelines தெரிந்திருக்க வேண்டும்.
தனியாக பணியாற்ற தெரிய வேண்டும்
RESTful API டிசைன், மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ட்ச்சர் பற்றிய அறிவு இருக்க வேண்டும். எஸ்க்யூஎல், NoSQL டேட்டாபேசஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் மானிட்டரிங் மற்றும் லாக்கிங் டூல்ஸ்கள் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக Stackdriver, Prometheus, Dynatrace தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, தனியாக பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மேலும் ஜாவா ஸ்பிரிங்புட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
5 இடங்களில் நியமனம்
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், கேரளா, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, இடம், நேரம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். அதன்பிறகு இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications