IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. பெங்களூரில் மே 16ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ மே 16ம் தேதி நடைபெற உள்ளது.

நம் நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது.

it-jobs-tcs-hiring-for-salesforce-developer-roles-in-bengaluru

இதற்கிடையே தான் பெங்களூரில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது Salesforce Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு

சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 15 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக Apex Coding, Triggers, Salesforce Ligtning Web Component உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.

Salesforce Ligting, salesforce sales மற்றும் Serice CloudConfigurations உள்ளிட்டவற்றிலும் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். டெக்னிக்ல் மற்றும் சொல்யூஷன் டிசைன் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். சேல்ஸ்ஃபோ்ஸ் டெக்னாலஜியில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதற்கான இண்டர்வியூ மே 16ம் தேதி காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை நடைபெற உள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services TCS brigade bhuwalka, No.40, ITPL Main Raod, pattandur Agrahar, Whitefield, Bengalur, Karnatkaa 560 066 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். கல்வி சான்று, பணி அனுபவம் உள்ளிட்ட சான்றுகள், போட்டோ, ரெஸ்யூம் உள்பட இண்டர்வியூவுக்கு தேவையான ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+