IT JOBS: TCS ஐடி வேலை.. விண்ணப்பிக்க பிப்.5 கடைசி நாள்.. கோவையில் இண்டர்வியூ - சென்னையில் பணி
கோவை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பிப்ரவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு பிப்ரவரி 7 ம் தேதி கோவையில் இண்டர்வியூ நடக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது டெக்னிக்கல் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட் (Technical Support Specialist) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை விரும்புவோருக்கு என்னவெல்லாம் தகுதி வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும். டைப்பிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். நைட்ஷிப்ட் மற்றும் வார இறுதி நாட்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மேலும் Core Tech Support Projects, இன்ப்ரா, ஸ்டோரேஜ், சர்வீஸ் டெஸ்க் உள்ளிட்டவற்றில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ட்ரபிள்சூட்டிங், ரிசால்விங், ஏதாவது ரு டிக்கெட்டிங் டூல், ஐடிஐஎல் அறிவு, ஏடபிள்யூஎஸ், அசூர், கூகுள் கிளவுட் உள்ளிட்டவற்றில் பணிஅனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, முந்தைய பணியில் சாட் அனுபவம் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 5ம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. அதன்பிறகு பிப்ரவரி 7 ம் தேதி கோவையில் அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை இண்டர்வியூ நடைபெறும்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் PSG College of Technology, Avinashi road, Peelamedu, Coimbatore - 641 004 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கூடுதல் விவரங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications