IT Jobs: மே 9 ம் தேதி இண்டர்வியூ.. டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஐடி வேலை.. ரெடியா?
சென்னை: டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ மே 9 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், புனே உள்பட இந்தியாவின் பிற இடங்களிலும் நியமனம் செய்யபடலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Azure Dot Net Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி C#, ASP.NET MVC, Web API, Ef, .NET Core, React JS உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சாப்ட்வேர் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும்.

மைக்ரோசாப்ட் அசூர் சர்வீஸ்களான Azure App Service, Functions, Azure SQL Database, Azure Storage, Azure Logic Apps உள்ளிட்டவைற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். ReactJS பயன்படுத்தி வெப் யூஐ பில்டிங் மற்றும் Kafka பயன்படுத்தி இன்டகிரேஷன் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இவை அனைத்தும் கட்டாயம் இருக்க வேண்டும்.
இதுதவிர Good to Have Skills என்ற வகையில் மைக்ரோசாப்ட் அசூர் சர்ட்டிபிகேட் (AZ 204, AZ 303) இருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். டிசைனிங் மற்றும் இம்ளிமென்ட்டிங் RESTful APIs அனுபவம் இருக்க வேண்டும். Azure DevOps மற்றும் CI/CD டெப்ளாய்மென்ட் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். அதேபோல் Agile டெவலப்மென்ட் மற்றும் மெத்தடலாஜிஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கட்டாயமாக அனுபவம் இருக்க வேண்டும். 5 ஆண்டுக்கு குறைவான அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இதற்காக இண்டர்வியூ மே 9 ம் தேதி புனேவில் நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் TCS Quadra Office, II, S.No.238/239, Magarpatta Road, Opp., Magarpatta City, Keshav Nagar, Hadpsar, Pune, Maharashtra 411 028 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications