IT JOBS: சென்னையில் பிப்ரவரி 28 ம் தேதி இண்டர்வியூ.. அழைக்கும் TCS.. சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்படடு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பிப்ரவரி 28 ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தொடர்ந்து பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது Java FSD/Java Springboot Microservices (All Cloud) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா 8 மற்றும் Above ஸ்பிரிங்ஃப்ரேம்வொர்க்/ஸ்பிரிங்புட்ஆங்குலம் 6+, RXJS நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்குலர் ரியாக்டிவ் பார்ம், வென்னிலா ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் எச்டிஎம்எல் 5/சிஎஸ்எஸ்3, இஎஸ் 6 தெரிந்திருக்க வேண்டும்.
டைப்ஸ்கிரிப்ட், ஆரக்கள்/எஸ்க்யூஎல், Git, Nexus, Sonatype, Kibana/Elastic தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Kafka, AKS, Postgres, Docker, Linux, Mesos Marathhon all cloud experience உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். சம்பளம் குறித்தும், பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றியும் அப்போது தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ பிப்ரவரி 28 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TCS Sholinganallur, Kumaran Nagar, 415/21-24, TNHB Main Rd, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
https://www.linkedin.com/jobs/view/4374344891/
*
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications