IT Jobs:ஐடி வேலை ரெடி.. அழைக்கும் TCS நிறுவனம். ஏப்ரல் 18 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் சென்னையில் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டிசிஎஸ். நம் நாட்டின் முக்கிய நகரங்களில் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. சென்னையிலும் அலுவலகம் உள்ளது.

இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் vSphere/VCF SME ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்பும் நபர்களுக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
டெக்னிக்கல் ஸ்கில்ஸ் என்ன?
தற்போது அறிவிக்கப்பட்டள்ள பணிக்கு டெக்னிக்கல் ஸ்கில்ஸாக Core VMwareExpertise கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் VMare VSphre (ESXI, Vcenter Server)-ல் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். அதேபோல் SDDC மேனேஜர் உடன் VMware Cloud Foundation (VCF) தெரிந்திருக்க வேண்டும்.
தகுதிகள் என்னென்ன?
மேலும் vSAN ஆர்க்கிடெக்சர் மற்றுமு் ஆபரேஷன்ஸ் தெரிந்திருக்க வேண்டும். NSX (NSX-T/NSX) நெட்வொர்க்கிங் மற்றும் செக்யூரிட்டி தெரிந்திருக்க வேண்டும். VMware LCM, Patching, அப்கிரேட் ஸ்டேட்டிஜிஸ், ஹை அவாலபிலிட்டி (HA), டிஆர்எஸ், விமோஷன், ஸ்டோரேஜ் வி மோஷன் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவம் என்ன?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 10+ ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
ஏப்ரல் 18 ம் தேதி இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 18ம் தேதி (சனிக்கிழமை) சென்னை Magnum அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face to Face முறையில் இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
ஏப்ரல் 18ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்க முடியும் என்பவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்ய வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications