IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே ஏப்ரல் 18ல் இண்டர்வியூ + பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 18 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனமாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறதுது. இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Java Spring Boot Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it-jobs-tcs-walk-in-interview-on-april-18-for-java-spring-boot-developer-in-chennai

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஜாவா (8+), ஸ்பிரிங்புட், மைக்ரோசர்வீசஸ் உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோ் AWS Services (EC 2 S3, CloudWatch, IAM etc) உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

என்னென்ன தகுதிகள் வேண்டும்?

அதேபோல் Production Support, triage, trouble shooting உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Git, CI/CD Pipelines, and GitHub Copilot உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ITIL மற்றும் சர்வீஸ் மேனேஜ்மென்ட் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் லீடர்ஷிப் திறமை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தப்பட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சென்னையில் பணி நியமனம்

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

ஏப்ரல் 18 ம் தேதி இண்டர்வியூ

இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 18 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் TCS - Sholinganallur, Kumaran Nagar, 415/21-24 TNHB Main Rd, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இதனால் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து ஏப்ரல் 18 ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+