IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்'
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சார்பில் பிஎஸ்சி, பிசிஏ படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சேரும்போதே ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளதோடு தனியே சம்பளமும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியான விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies). இந்த நிறுவனத்தில் Wipro's Work Integrated Learning Program (WILP) 2024 & 2025 FY 26 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து 2024, 2025ம் ஆண்டில் கல்லூரியில் பிசிஏ அல்லது பிஎஸ்சி டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA உடன் முடித்திருக்க வேண்டும். இதில் பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், புள்ளியில் (Statistics), எலக்ட்ரானிக்ஸ் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். Business Maths & Applied Matheatics பாடங்கள் இதில் வராது. மேலும் 10, பிளஸ் 2 மட்டும் தொலைதூர கல்வியில் படித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் கல்லூரி படிப்பை தொலைதூர கல்வியில் படித்து இருக்க கூடாது. விண்ணப்பத்தாரர்கள் பள்ளி படிப்பை இடைவெளியுடன் முடித்திருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி இருக்க கூடாது. ஆன்லைன் அசஸ்மென்ட்டின்போது ஒரு அரியர் இருக்கலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஜாயினிங் போனஸாக (Joining Bonus) ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக மாதந்தோறும் ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு மாதந்தோறும் ரூ.17,553, மூன்றாவது ஆண்டு மாதந்தோறும் ரூ.19,618, 4வது ஆண்டு மாதந்தோறும் ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். இது ஒரு PAN India பணியாகும். இதனால்நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் 30 கடைசி நாளாகும். இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications