Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT Jobs: ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அசத்தலான சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரில் செயல்பட்டு வரும் Zenskar நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இது Hybrid வகை பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்றலாம்.

Zenskar நிறுவனத்தில் இருந்து Implementation Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

it-jobs-zenskar-hiring-for-implementation-engineer-roles-in-bengaluru-with-hybrid-mode
Photo Credit:

இது Fresher-களுக்கான வேலைவாய்ப்பாகும். இதனால் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி மற்றும் இன்ஜினியர் முடித்தவர்கள் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

ஜாவா - பைத்தான்

டெக்னிக்கல் ஸ்கில்லாக சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பைத்தான், ஜாவா ஸ்கிரிப்ட்டில் தெரிந்திருக்க வேண்டும். API மற்றும் REST இன்டர்கிரேஷன் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். டேட்டா புராசஸிங் மற்றும் ஸ்கிரிப்டிங் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். SQL மற்றும் ரிலேஷனல் டேட்டாபேசஸ் பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.

இன்டர்ன்ஷிப்

Nice to have என சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏபிஐ, ஸ்கிரிப்படிங், ஆட்டோமேஷன் புராஜெக்ட்டில் தெரிந்திருக்க வேண்டும். பேக்எண்ட் டெவலப்மென்ட், டேட்டா இன்ஜினியர் அல்லது இம்பிளமென்டேஷன் ரோல்ஸ் உள்ளிட்டவற்றில் இன்டர்ன்ஷிப் இருக்கலாம். அதேபோல் Saas டூல்ஸ் அல்லது பில்லிங் சிஸ்டம் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை விரைவாக கற்றுக்கொள்ளும் திறை இருக்க வேண்டும். டே்டடாவுடன் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு பைத்தான், REST APIs, SQL/PostereSQL, GSV/JSON Dat Formats, Git and GitHub, Internal APIs and automation scripts உள்ளிட்டவை பயன்படுத்த வேண்டியிருக்கும்..

ரூ.8 லட்சம் வரை சம்பளம்

தற்போதைய அறிவிப்பில் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ESOPs கிடைக்கும். ஊழியருடன் சேர்த்து குடும்பத்துக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஹைபிரிட்' பணியாகும்

இது Hybrid வகை பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். பணி என்பது கஸ்டமர் ஆன்போர்டிங் சப்போர்ட், டேட்டா மைக்ரேஷன், ஆட்டோமேஷன் மற்றும் டூலிங், பிராப்ளம் சால்விங் உள்ளிட்ட பிரிவுகளில் இருக்கும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பெங்களூரில் இந்த அலுவலகம் 3rd floor, A wing No 1, Carlton Towers, HAL Old Airports RD, HAL 2nd Stage, Indira Nagar, Bengaluru 560 008 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ரெஸ்யூமை [email protected], [email protected]கிற்கு இ-மெயில் அனுப்ப வேண்டும். அதன்பிறகு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். உடனடியாக விண்பண்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+