IT Jobs: Zoho நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. சென்னையிலேயே பணி.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் (Zoho IT Jobs)குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தற்போது சென்னையில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டி சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது
தற்போது ஜோஹோவில் யூசர் எக்ஸ்பிரியன்ஸ் டிசைனர் (User Experience Designer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி என்ன?
Bachelor in Design, HCI அல்லது அதுசார்ந்த பிரிவுகளில் அனுபவம் கொண்டர்வர்களும் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாகவிண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
ஆங்கிலம் தெரிய வேண்டும்
அதேபோல் விண்ணப்பம் செய்வோர் Figma, Adobe XD அல்லது அதேபோன்ற டூல்ஸ்களில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க UX Design பிரிவுக்கான பணியாகும்.
சம்பளம் என்ன?
இதனால் அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
சென்னையில் பணி
மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications