சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் வேலை.. 526 பணியிடங்கள்.. மாதம் 1.12 லட்சம் சம்பளம்.. ரெடியா இருங்க
சென்னை: இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவில் சப் இஸ்ன்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்கள் என மொத்தம் 526 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன?, வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை பிரிவு (ITBPF)-வில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் (டெலி கம்யூனிகேஷன்ஸ்) என மொத்தம் 526 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
சப் இன்ஸ்பெக்டர்: 92 (78 ஆண்கள் + 14 பெண்கள்)
தலைமைக்காவலர்: 383 (325 + 58)
கான்ஸ்டபிள்: 51 (44 + 7) என மொத்தம் 526 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பி.எஸ்.சி/பி.டெக்/ பி.சி.ஏ ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
தலைமைக்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கொண்ட பிரிவை 12 ஆம் வகுப்பில் எடுத்து படித்து இருக்க வேண்டும். ஐடிஐ அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டோர் விண்ணபிக்கலாம். கான்ஸ்டபிள் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 23 ஆகும். அனைத்து பணியிடங்களுக்கும் அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை உண்டு.
தேர்வுக் கட்டணம்: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.200 ம், கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.100 ம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்டோருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை: உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு , எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மெடிக்கல் டெஸ்ட் ஆகியவைகளுக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 15.11.2024- முதல் அவகாசம் தொடங்குகிறது. 14.12.2024 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
சம்பளம் எவ்வளவு?:
சப் இன்ஸ்பெக்டர்: ரூ.35,400 -1,12,400
ஹெட் கான்ஸ்டபிள்: ரூ.25,500 - 81,100 வரை
கான்ஸ்டபிள்: ரூ.21,700 - 69,100 வரை
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.igcrect.in/wp-content/uploads/2024/11/ITBP-Telecommunication-Recruitment-2024-Notification-PDF.pdf இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications