பட்டுக்கோட்டை பாய்ஸுக்கு பக்கா சான்ஸ்.. அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்! 8வது படித்தாலே போதுமாம்
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை மாபெரும் தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பல மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதமும் தஞ்சாவூர், திருவள்ளூர், ஈரோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் நாளை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த முகாம் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பட்டுக்கோட்டையில் உள்ள ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 8வது, SSLC / HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்வி தகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் இவ்வேலை வாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணி வாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலை நாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலை நாடுநர்களுக்கும், வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் இலவசமாகும். மேலும் தகவலுக்கு 04362237037.
இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, ஏனாதி , பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் _614615 -Landmark:https://maps.app.goo.gl/iXbHuYGwpN2DwxQYA " என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த முகாமில் பங்கேற்க இருப்பவர்கள் சுய விபர குறிப்பு (RESUME), கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஃபார்மலான உடையணிந்து தாங்கள் படித்த துறை சார்ந்த முக்கிய விசயங்களை படித்துவிட்டு நேர்காணலில் சிறப்பாக செயல்பட்டால் வேலை நிச்சயம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications