மத்திய உளவுத்துறையில் வேலை.. மாதம் 1.40 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்
சென்னை: மத்திய உளவுத்துறையில் ACIO-II -இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ரூ. 44,900 முதல் 1,42,400 வரை வழங்கப்படும்.
மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறை, நாட்டின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான அமைப்பாக இது கருதப்படுகிறது.

டெல்லியில் இதன் தலைமையகம் உள்ளது. மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள ACIO-II பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்;
உதவி மத்திய புலனாய்வு அதிகாரி Grade - III பணியிடங்கள் - 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் பொதுப்பிரிவு 1,337, இடபிள்யூஎஸ்- 442, ஓபிசி - 946, எஸ்சி - 566, எஸ்.டி- 226 என மொத்தம் 3,717 பணியிடங்கள் உள்ளன.
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசின் ஊதிய விகிதம் லெவல் 7-இன் படி ரூ. 44,900 முதல் 1,42,400 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். கணிணி பற்றிய அறிவு அவசியம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு (Tier-I, Tier-II), நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக் கட்டணமாக ரூ.650 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி, பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.550 செலுத்த வேண்டும். ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். https://www.mha.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 19.07.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 10.08.2025 ஆகும்.
நாளிதழ்களில் மட்டுமே தற்போது சுருக்கமான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் https://www.mha.gov.in/ வெளியாகும். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications