இந்திய கடலோர காவல் படையில் வேலை.. ரூ.56,000 சம்பளம்.. டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்திய கடலோர காவல்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் டியூட்டி மற்றும், டெக்னிக்கல் பொறியாளர் பணியிடம் என மொத்தம் 70 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
ஜெனரல் டியூட்டி (GD) - 50
டெக்னிக்கல் பொறியாளர் (பொறியாளர் / எலக்ட்ரிக்கல் ) - 20
என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: ஜெனரல் டியூட்டி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து டிகிரி முடித்து இருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். 12 வகுப்பு வரை கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை படித்து இருக்க வேண்டும். கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ முடித்து டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
டெக்னிக்கல் (மெக்கானிக்கல்) மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் துறைசார்ந்த பிரிவில் என்ஜினியரிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 21 வயது நிரம்பியவர்களும் 25-க்கு வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது 01.07.1999 & 30.6.2003 ஆகிய ஆண்டுகளுக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கடலோர காவல் படையில் பணியாற்றுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு.
சம்பள விவரம்:
ஜெனரல் டியூட்டி (ஜிடி) - ரூ.56,100/-
டெக்னிக்கல் (மெக்கானிக்கல்) - ரூ.56,100/-
டெக்னிக்கல் (எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்) - ரூ.56,100/-
அரசு விதிகளின் படி இதர சலுகைகளும் கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
கணிணி வழி தேர்வு , CCBT தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த விவரங்கள் தேர்வு அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். பட்டியலினம்/பழங்குடியினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 06.03.2024 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://joinindiancoastguard.cdac.in/cgcat/assets/img/news/Advertisement_for_Asst_Comdt_2025_Batch.pdf இங்கே கிளிக் செய்யவும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications