இந்திய கடலோர காவல்படையில் ரூ.22 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. பிளஸ் 2 தகுதி தான்.. தேதி முடிய போகுது!
சென்னை: இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள 260 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. இதற்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை 27 ஆம் தேதியே கடைசி நாள். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும்.
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Navik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 13 ஆம் தேதி வெளியாகியது. மொத்தம் 260 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. வயது வரம்பு என்ன? கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:
வடக்கு மண்டலம் - 79 பணியிடங்கள்
மேற்கு மண்டலம் - 66 பணியிடங்கள்
கிழக்கு மண்டலம் - 33 பணியிடங்கள்
வடகிழக்கு மண்டலம் - 68 பணியிடங்கள்
வட மேற்கு மண்டலம் -12 பணியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் - 03 பணியிடங்கள் என மொத்தம் 260 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
பணியிட விவரம்: ஜம்மு காஷ்மீர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சண்டிகார் ஆகியவை வடக்கு மண்டலத்தில் வருகின்றன. சத்தீஷ்கர், மகராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, தாதர் &நகர் ஹவேலி, டாமன் &டையூ, லட்சத்தீவு ஆகிய பகுதிகள் மேற்கு மண்டலத்தில் வருகின்றன. பீகார், மேற்குவங்காளம், ஜார்க்கண்ட், அசாம், திரிபுரா, மேகலாயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாசல பிரதேசம், மிசோரம், சிக்கிம், ஒடிஷா ஆகியவை வடகிழக்கு மண்டலத்தில் வருகின்றன. கிழக்கு மண்டலத்தில் ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுவை ஆகியவை வரும்.
கல்வி தகுதி & வயது வரம்பு: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணக்கு, இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை படித்திருத்தல் அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.21,700 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். இதனுடன் அகவிலைப்படி உள்ளிட்டவையும் உண்டு.
தேர்வு முறை: கணிணி வழி தேர்வு, உடல் தகுதி, மெடிக்கல் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு உள்பட 4 கட்டங்களுக்கு பிறகு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதுபற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப கட்ட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆர்வமும் போதுமான தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்; 13.02.2024; விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.02.2024 ஆகும். நாளையே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளவும். விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை https://joinindiancoastguard.cdac.in/cgept/ கிளிக் செய்யவும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications