இந்திய கடற்படையில் வேலை.. மாதம் ரூ. 57 ஆயிரம் வரை சம்பளம்.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்திய கடற்படையில் காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு கல்வித்தகுதி என்ன, சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 362 டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களில் இருந்து ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களும் 25 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும் அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18000 முதல் 56,900 வரை ஊதியமாக வழங்கப்படும். தேர்வை பொறுத்தவரை இரண்டு மணி நேரம் நடைபெறும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் இடம் பெற்று இருக்கும். 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு இருக்கும். தேர்வுகள் போர்ட் பிளேரில் நடைபெறும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.09.2023 ஆகும். விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://karmic.andaman.gov.in/HQANC/ என்ற இணையதள பக்கத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
துறைசார்ந்த ஐடிஐ படிப்பு மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள https://st.adda247.com/https://www.careerpower.in/blog/wp-content/uploads/2023/08/29152205/indian-nevy.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications