சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு.. சென்னையில் பணியிடம்! 30 ஆயிரம் சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க
சென்னை: சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாவூர் ஒருங்கிணைந்த சேவை மையம், வட சென்னை-இல் பணிபுரிவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மாதம் ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

பெண்கள் உதவி மையம்
அதில் புதிதாக துவங்க இருக்கக்கூடிய எர்ணாவூர் ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. எர்ணாவூர் ஒருங்கிணைந்த சேவை மையம், வட சென்னை-க்கான தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்காக கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..
மைய நிர்வாகி
மைய நிர்வாகி (Centre Administrator) ஒரு பணியிடம் நிரப்பப்படுகிறது. சமூகப்பணி, உளவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் படித்து இருக்க (Master's Degree in Social Work / Psychology) வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.35,000/- ஆகும்.
மூத்த ஆலோசகர்
மூத்த ஆலோசகர் (Senior Counselor) ஒரு பணியிடம் நிரப்பப்படுகிறது. M.S.W (Master's Degree in Social Work) அல்லது ஆலோசனை உளவியல் M.Sc (Counselling Psychology) பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
(அல்லது) ஒரு வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது அதற்கு வெளியே பணிபுரிந்திருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.22,000/- ஆகும்.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்
தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Administrator) ஒரு பணியிடம் நிரப்பப்படுகிறது. இளங்கலை பட்டப்படிப்பு (B.Tech., B.Sc) மற்றும் Diploma in Computers/IT மற்றும் தர மேலாண்மையியல் (Data Management), செயல்முறை ஆவணங்கள் தயாரிப்பு (Process Documentation) மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்கள் (Web based reporting formats)-ல் மாநில/மாவட்ட/தன்னார்வ தொண்டு நிறுவனம் இவைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் தேவை. உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.20,000/- ஆகும்.
வழக்கு பணியாளர்கள்
வழக்கு பணியாளர்கள் (Case Worker) 6 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) (அல்லது) ஆலோசனை உளவியல் M.Sc (Counselling Psychology) பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
வயது 35-க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.18,000/- ஆகும்.
பாதுகாப்பாளர்
பாதுகாப்பாளர் (Security Guard) 2 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.12,000/- ஆகும்.
பன்முக உதவியாளர்
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) 2 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் மற்றும் அலுவலகத்தை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றுதல்களுடன் 31.10.2025 மாலை 5.00 மணிக்குள், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், எட்டாவது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் மற்றும் ([email protected]) மூலமாகவும் விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications