Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிளஸ் 2" படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை! மாதம் ரூ.35,000 சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) ஸ்டெனோகிராபர் (ஒப்பந்த அடிப்படையில்) பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

அரசு வேலை என்பது படித்த இளைஞர்களின் பெரும் கனவுகளில் ஒன்றாக இருக்கும். எப்படியாவது அரசு வேலைக்கு போய்விடமாட்டோமா என ஆண்டுக்கணக்கில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளஞர்களை காண முடிகிறது. மத்திய மாநில அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் அவ்வப்போது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Job news: Contract work under central Government department: 12th standard qualification is enough

அதேபோல், ஒப்பந்த அடிப்படையிலும் பணியிடங்களை சில வாரியங்கள் நிரப்பி வருகின்றன. அந்த வகையில் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) ஸ்டெனோகிராபர் (ஒப்பந்த அடிப்படையில்) பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 7 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள்ளது. இந்த அறிவிப்பு 07.6.2023 ல் வெளியிடப்படது. அதில் இருந்து 30 நாட்கள் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் வரும் ஜூலை மாதம் 07 ஆம் தேதி விண்ணப்பம் சென்று சேர்வதற்கான கடைசி நாள் ஆகும். அதன் பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை கீழே காணலாம்.

பதவி விவரம்: Stenographer
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
காலிப்பணியிடங்கள்: 07 (ஒப்பந்த அடிப்படையில்).
தேர்வு செயல் முறை: விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு முறை முடிவு செய்யப்படும்.
சம்பள விவரம்: மாதம் ரூ.35,000/- ஊதியம் வழங்கப்டும்

எப்படி விண்ணப்பிப்பது: விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுள் விண்ணப்பிக்க வேண்டும்
வயது வரம்பு: 18ல் இருந்து 27-க்குள் இருக்க வேண்டும்
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி தகுதிக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், அனுப சான்றிதழ் ஆகியவற்றின் சுய சான்று அளித்த நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

Job news: Contract work under central Government department: 12th standard qualification is enough

* அவகாசம் முடிந்த பிறகு வரும் தேதி பரிசீலனை செய்யப்படாது. போஸ்டல் மூலமாக அனுப்பும் போது ஏற்படும் தாமதங்களுக்கு பொறுப்பேற்க படாது.
* விண்ணப்பதாரர்கள் தவறான தகவல்கள் எதையும் விண்ணப்பத்தில் தெரிவிக்க்கக்கூடாது.
* விளம்பர அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தகுதிகள் இல்லாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

* காலி பணியிடங்களை நிரப்புவது பற்றிய அறிவிப்பை ஒத்திவைக்கவோ, ரத்து செய்யவோ NBEMSக்கு முழு உரிமை உண்டு.

* விண்ணப்பதரர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தி தேர்வு செய்யவோ அல்லது வேறு தேர்வு முறைகளை பின்பற்றவோ வாரியத்திற்கு முழு உரிமை உண்டு.
* தேர்வு பற்றிய விவரங்கள், கூடுதல் தகுதிகக்ள் என்பன போன்ற முழு விவரங்கள் விண்ணப்ப படிவங்களை டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும் https://www.natboard.edu.in/viewNotice.php?NBE=WGZqQ0YvTDE3SzBMS0lOOXFBTlNXdz09 .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+