பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்..ஐக்கிய அரபு அமீரகத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை! சூப்பர் சான்ஸ்!
சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter மற்றும் Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள் எனவும், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகம் Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter மற்றும் Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," Welder (CS-GTAW + SMAW. SS-GTAW + SMAW, CS & SS-GTAW + SMAW, Alloy (P92 & P91) GTAW + SMAW. Duplex & Super Duplex GTAW + SMAW). Piping Fabricator, Grinder(AG4 & AG7) / Gas cutter மற்றும் Piping Foreman தேவைப்படுகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ. 78,000/- வரை, Piping Fabricator 5. 40,000/- . 51,000/- Piping Fitter 36,000/-முதல் ரூ. 42,000/- வரை Structure Fabricator ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Structure Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை, Millwright Fitter ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ. 32,000/- வரை மற்றும் Piping Foreman ரூ. 53,000/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர் இந்நிறுவனத்திற்கு ரூ.35,400 செலுத்தினால் போதும். இப்பணிகளுக்கான நேர்காணல் 31.01.2025 மற்றும் 01.02.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் 2 (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்
முகவரி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்). ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32
கூடுதல் விவரங்களுக்கு அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன அதிகாரப்பூர்வ வலைதளம்: www.omcmanpower.in.gov.in மற்றும் தொலைபேசி எண் 044 - 22502267 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications