கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!
நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 183 பனி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 10-ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. இந்திய அணுமின் கழகத்தின் சார்பில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் இந்த அணு மின்நிலையம் இயங்கி வருகிறது. இந்த அணு மின் நிலையத்தில் தற்போது இரண்டு உலைகள் உள்ளன. இதில் மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

சுமார் ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணுஉலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் 2024ம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அப்ரண்டிஸ் அடிப்படையில் பணிபுரிய ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்: பிட்டர், மெக்கானிக், வெல்டர், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் என மொத்தம் 183 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கல்வித்தகுதி: இந்த பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை: வயது வரம்பை பொறுத்தவரை, 31-7-2023 அன்றைய தேதிப்படி 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மெரிட் லிஸ்ட், சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.npcil.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அந்த படிவத்தை டவுன்லோடு செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களின் ஜெராக்ஸ் இணைத்து, 'முதுநிலை மேலாளர், எச்.ஆர் பிரிவு, கூடங்குளம் அணுமின் திட்டம், கூடங்குளம் அஞ்சல், ராதாபுரம் தாலுகா, திருநெல்வேலி - 627106' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். அறிவிப்பு குறித்த முழு விவரங்களை https://www.npcil.nic.in இணையத்டளத்தில் தெரிந்து கொள்ளமுடியும்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications